background img

புதிய வரவு

ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு: லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகிறது; ஒபாமா அவசர ஆலோசனை

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடி வரும் பொது மக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. மக்கள் ஆதரவு புரட்சி படையினர் 5 நகரங்களை கைப்பற்றி இருந்தனர். அதில் 4 நகரங்களை கடாபி படை மீட்டு உள்ளது. புரட்சி படையினரிடம் இருக்கும் பென்காசி நகரை பிடிக்க இப்போது தீவிர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீது விமானம் மூலம் குண்டு வீசப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மூலம் குண்டு வீசுவதற்கு ஐ.நா.சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்தன. ஆனாலும் அதிபர் கடாபி கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து ராணுவ தாக்குதல்கள் மூலம் ஏராளமானோரை கொன்று குவித்து வருகிறார்.

லிபியாவை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா 2 விமானந்தாங்கி போர் கப்பல்களை லிபியா அருகே அனுப்பி இருந்தது. ஆனாலும் கடாபி பணியவில்லை. இதற்கிடையே லிபியா பற்றி ஆராய ஐ.நா. பாதுகாப்பு சபை அவசர கூட்டம் நியூயார்க்கில் நடந்தது. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 10 பேர் கலந்து கொண்டனர். நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷியா, தற்காலிக உறுப்பினர்களான இந்தியா, ஜெர்மனி, பிரேசில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் கடாபி உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அங்குள்ள மக்களை பாதுகாக்க மற்ற நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது. பொதுமக்கள் பகுதிகளில் போர் விமானம் பறக்க தடை விதிப்பது என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதற்கு 10 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து ஓட்டு போட்டனர். ஐ.நா.சபை தீர்மானத்தை அடுத்து லிபியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது.

ஐ.நா.தீர்மானத்தை கடாபி ஏற்க மறுத்தால் உடனடியாக தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கிலாந்து பிரதமர் கேமரூன், பிரான்சு அதிபர் சார்கோசி ஆகியோருடன் அவசரமாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர்சுசன் ரைஸ் கூறும் போது, “ஐ.நா.சபை தீர்மானம் மூலம் கடாபிக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தி மக்களை கொல்வதை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

ஐ.நா.வுக்கான இங்கிலாந்து தூதர் மார்க்லேயர் கூறும் போது, “கடாபி மீது நடவடிக்கை எடுக்க சர்வ தேச சமுதாயர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர் உடன டியாக அமைதியை கொண்டு வரவேண்டும். இல்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து தயாராக இருக்கிறது” என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts