புதுடெல்லி: ஜப்பானில் பூகம்பம், சுனாமி ஆகிய இயற்கை சீற்றங்களாலும் அணுக்கதிர் வீச்சாலும் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். அவருடன் வெளியுறவுத் துறை இணை செயலாளர் கவுதம் உள்ளிட்ட வெளியுறவு துறை அதிகாரிகளும் சென்றனர். அவர்களை இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் அகிதகா சைகி வரவேற்றார். அவரிடம் ஜப்பான் மக்களுக்கு ஆழ்ந்த கவலையை பிரதமர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment