திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் திருப்பூரில் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக போட்டியிடுகிறது. கடந்த 1951ம் ஆண்டு முதல் 13 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த திருப்பூர் சட்டமன்ற தொகுதி, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 2 தொகுதிகளாக பிரிந்து 14வது சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. திருப்பூர் தொகுதியில் தி.மு.க 3 முறை மட்டுமே களம் கண்டுள்ளது. கடந்த 1967, 1971 மற்றும் 1977ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் மட்டுமே திருப்பூர் தொகுதியில் தி.மு.க போட்டியிட்டது. அதன்பின்னர் நடந்த 7 சட்டமன்ற தேர்தல்களிலும், தி.மு.க போட்டியிடவில்லை. மாறாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட், பாரதிய ஜனதா மற்றும் ம.தி.மு.க கட்சிகளே போட்டியிட்டன. 34 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திருப்பூர் வடக்கு தொகுதியில் தி.மு.க போட்டியிடுகிறது.
0 comments :
Post a Comment