background img

புதிய வரவு

காளான் குழம்பு

தேவையாக பொருட்கள்

காளான் 200 கிராம்

சின்ன வெங்காயம் 50கிராம்

தக்காளி 50கிராம்

பூண்டு 25 கிராம்

மிளகு 1 தேக்கரண்டி

சிறிய சீரகம் 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் 3 தேக்கரண்டி

மசம்லா தூள் 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, றம்பை தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

தேங்காய் பால் 1 கோப்பை

தண்ணீர் 1 கோப்பை

மரக்கறி எண்ணெய் 4 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம் தேவையான அளவு (தாளிப்பதற்கு)

வாசனைக்காக ஏலக்காய் (தேவைப்பட்டால்)

செய்முறை :

சிறிய வெங்காயத்தையும், தக்காளியையும் ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பூண்டு, ஏலம், சிறிய சீரகம் ஆகியவற்றை அரைத்து விழுதாக எடுத்து கொள்ளவும்.

பின் காளானை இளம் சுடு நீரில் இரண்டு மூன்று முறை கழுவி இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொண்ட பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து அதில் எண்ணெய், கடுகு வெந்தயம் போட்டு பொரிந்தவுடன், வெட்டிவைக்கப்பட்ட தக்காளியையும், வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதங்கியதும் கொச்சிக்காய்தூள், மிளகுதூள், மசாலாதூள், மஞ்சள்தூள், விழுதாக அரைக்கப்பட்ட பூண்டு சிறிய சீரகம், றம்பை போன்றவற்றை அவற்றுடன் போட்டு நன்றாக கிளரிக் கொள்ளவும்.

பின்னர் வெட்டப்பட்ட காளானை அதனுலிட்டு தேவையான அளவு உப்பைச் சேர்த்து நன்கு கிளரி 3 நிமிடம் வதங்கியதும் 1 கோப்பை தண்ணீரை ஊற்றி இதமான நெருப்பில் 10 நிமிடம் வேகவிடவும். பின் தயாராக வைக்கப்பட்ட தேங்காய்ப் பாலை ஊற்றி 4 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும் இறக்கும் தறுவாயில் கறிவேப்பிலையை குழம்புக்குள் போட்டு இறக்கிப் பரிமாரலாம்.

( இவ்வாறு காளானை கறியாகவோ, அல்லது வேறுவிதமாக சூப் வகைகளாகவோ உண்பதன் மூலம் உடற் பருமன் குறைவதுடன், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை தடுக்கின்றது என மருத்துவ ஆய்வுகள் கூறப்படுகின்றன. மற்றும் போலிக் அமிலம் , விட்டமின் ஆ யும் காணப்படுகிறது. சிறந்த மருத்துவ குணமுள்ளதும், நோயாளர்களுக்கு சிறந்த ஆரோக்கியமான உணவாகவும் காளான் அமைகின்றது.)

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts