background img

புதிய வரவு

மலையாள படத்தில் மாமியார் வேடத்தில் குஷ்பு

மலையாளத்தில் “மிஸ்டர் மருகன்” என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இதில் மாமியார் வேடத்தில் நடிக்க குஷ்புவை அணுகினர். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார். மருமகனாக திலீப் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிப்பது பற்றி குஷ்பு கூறும்போது, “கதை என்னை மிகவும் கவர்ந்தது. இதுவரை 11 மலையாள படங்களில் நடித்துள்ளேன். ரஞ்சித் பட மொன்றில் கவுரவ வேடத்திலும் நடித்தேன். சவாலான வேடங்களில் நடித்து வருகிறேன்.

திலீப் படத்தில் இளம் மாமியாராக நடிக்க சம்மதித்ததற்கு காரணம் கதை. என்னையே சுற்றி நகர்வதால் அற்புதமான கதை. படத்துக்கு டப்பிங் பேச மாட்டேன். தமிழில் என்னால் பேச முடியும். மலையாளம் கஷ்டம் என்றார். மேலும் அவர் கூறும் போது, சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts