background img

புதிய வரவு

யோகா மூலம் அடித்த சினிமா யோகம்! - அனுஷ்கா

யோகா கற்றுக் கொடுக்கத்தான் வந்தேன். ஆனால் என்னிடம். யோகா கத்துக்க வந்த ஒரு இயக்குநர் என்னை நடிகையாக்கிவிட்டார், என்றார் நடிகை அனுஷ்கா.

'இரண்டு' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார்.

இப்போது ரஜினிக்கு ஜோடி, கமலுக்கு ஜோடி என்றெல்லாம் பேசும் அளவுக்கு படுபாப்புலாராகிவிட்டார். நடிகையான அனுபவம் அவர் கூறுகையில், "நான் ஒரு யோகா ஆசிரியை. நிறைய பேருக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றுதான் இதைப் படித்தேன்.

நான் நடத்திய யோகா வகுப்புக்கு தெலுங்கு இயக்குனர் ஒருவர் யோகா கற்றுக்கொள்ள வந்தார். அவர்தான் என்னை நடிகையாக்கி விட்டார். யோகா மூலம் கிடைத்த யோகம்தான் இந்த சினிமா வாழ்க்கை.

நடிகை பூமிகாவின் கணவராகி விட்ட பரத் தாகூர்தான் எனக்கு யோகா கற்றுக் கொடுத்த குரு. நகைகள் அணிய எனக்குப் பிடிக்காது, சேலை, மர்டர்ன் டிரெஸ் என எந்த மாதிரி உடை அணிந்தாலும் நகைகள் போட்டுக்கமாட்டேன்.

நான் உயரமாக இருப்பதால்தான் நடிக்க வாய்ப்பு வந்தது. சில நேரங்களில் மட்டும், இன்னும் கொஞ்சம் குள்ளமாக இருந்திருக்கலாமோ என்று நான் நினைத்ததுண்டு. தினமும் இரவு 8 மணிக்கு முன்பு சாப்பிட்டு விடுவேன். எனது உடம்பு கச்சிதமாக இருப்பதற்கு அதுதான் காரணம்," என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts