background img

புதிய வரவு

ஐந்தரிசிப் பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி - 1 ஆழாக்கு
புழுங்கல் அரிசி - 1 ஆழாக்கு
பாசிப்பருப்பு - 1 ஆழாக்கு
ஐவ்வரிசி - முக்கால் ஆழாக்கு
ரவை - முக்கால் ஆழாக்கு
சர்க்கரை - அரை ஆழாக்கு
வெல்லம் - ஒன்றரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப்பருப்பு மூன்றையும் ஊறவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் ஐவ்வரிசி, ரவை இரண்டையும் ஊற வைக்கவும்.

சுமார் 1 மணி நேரம் ஊறிய பின்னர் பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசிப்ருப்பு மூன்றையும் கிரைண்டரில் அரைக்கவும்.

ஓரளவு அரைத்ததும் சர்க்கரை சர்க்கரை, வெல்லத்தை சேர்த்து மீண்டும் அரைக்கவும்.

சிறிது நேரம் கழித்து ஊறிய ஐவ்வரிசி, ரவையைச் சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.

வாணலியில் இருப்புச் சட்டியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வட்டமான, அகலமான கரண்டியில் மாவை ஊற்றவும்.

ஒருபுறம் வெந்ததும் திருப்பி விட்டு மறுபுறம் பொன்னிறமாக வெந்தவுடன் எடுக்கவும்.

இவ்வாறு ஒவ்வொன்றாகத்தான் ஊற்ற வேண்டும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts