தேவையானவை:
ஆட்டுக்கறி - 400 கிராம்
முருங்கைக்காய் - 3
காய்ந்த மிளகாய் - 20 கிராம்
வெங்காயம் - 30 கிராம்
சீரகம் - முக்கால் தேக்கரண்டி
தேங்காய் - 3 துண்டுகள்
மஞ்சள் துண்டு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியைத் தேவையான அளவு துண்டுகளாக வெட்டி, தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கறியைப் போட்டு வேக வைக்கவும்.
முருங்கைக்காயைத் தேவையான அளவு துண்டுகளாக நறுக்கி கறியுடன் சேர்க்கவும்.
அதன்பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
மிளகாய், மஞ்சள் துண்டு, உப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து கறி பாதியளவு வெந்தவுடன் சேர்க்கவும்.
கறி நன்றாக வெந்தவுடன் வேறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு சிவந்தவுடன் வெங்காயத்தையும் போட்டு நன்கு சிவந்ததும் கறியைக் கொட்டி மூடிவிட வேண்டும்.
தேங்காயை திப்பியாக அரைத்து தாளித்த கறியில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கிவிடவும்.
அவ்வளவுதான் கறி முருங்கைக்காய் பொரியல் தயார். இதன் சுவையே தனிதான்.

0 comments :
Post a Comment