background img

புதிய வரவு

'மக்கள் என் பக்கம்'! - முழங்கும் கடாபி

ட்ரிபோலி: மக்கள் அனைவரும் என் பக்கமே உள்ளனர். என் மீது அன்பாக உள்ளனர். எனவே இந்த நாட்டை விட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை, என்று லிபியாவின் அதிபர் மொம்மர் கடாபி கூறியுள்ளார்.

லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக அதிபராக இருந்து வருகிறார் கடாபி. இந்த நூற்றாண்டில் அதிக காலம் ஆட்சி செய்யும் சர்வாதிகாரிகளுள் இவரும் ஒருவர்.

டுனீஸியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்களின் விளைவு லிபியாவிலும் எதிரொலித்துள்ளது. கடாபி பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அதிபர் கடாபி தலைநகர் ட்ரிபோலியில் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியது:

"லிபியா மக்கள் அனைவரும் என் மீது அன்பாக உள்ளனர். அனைத்து தெருக்களிலும் எனக்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை. காரணமே இல்லாமல் அவர்கள் ஏன் என்னை எதிர்க்க வேண்டும்? அனைத்து மக்களும் என் மீது அன்பாக இருக்கின்றனர்.

மக்கள் அனைவரும் என் பக்கம். என்னைக் காப்பாற்றவே தங்கள் இன்னுயிரை துறக்கின்றனர். நான் எனது நாட்டை விட்டும், அன்பான மக்களை விட்டும் வெளியேறமாட்டேன்.

நான் ஏன் எனது தாய்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். போராட்டம் நடைபெறுவதற்கு அல்கொய்தாவே காரணம். மக்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து எனக்கு எதிராக கிளப்பி வருகின்றனர். இதில் வெளிநாட்டு சதியும் பிரதான பங்கு வகிக்கிறது..", என்றார் கடாபி.

இதற்கிடையே, சொந்த நாட்டிலேயே தன் மக்களை கடாபி கொன்று குவிப்பதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் குற்றம் சாட்டியுள்ளார். அந்த படுகொலையை நிறுத்தாவிட்டால் லிபியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியதிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா.வின் பொதுச்சபையில் நேற்று இரவு அவர் பேசினார்.

அப்போது தனது மக்கள் மீது கடாபி அரசு ரசாயன ஆயுதங்களை வீசி ஒட்டு மொத்தமாக கொலை செய்து வருகிறது. எனவே, இங்கிலாந்தும், அமெரிக்காவும் லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை வரும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts