background img

புதிய வரவு

மலையாள நடிகர் சங்க விழாவில் பங்கேற்க நயன்தாரா, மீரா ஜாஸ்மின் மறுப்பு

மலையாள நடிகர் சங்கத்தினர் கோழிக்கோட்டில் நாளை கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பங்கேற்குமாறு அனைத்து நடிகர், நடிகைகளும் அழைக்கப்பட்டு உள்ளனர்.

மம்முட்டி, மோகன்லால் உள்பட முன்னணி நடிகர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். ஆனால் நயன்தாரா, மீராஜாஸ்மின் இருவரும் இவ்விழாவில் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா-பிரபுதேவா திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. எனவே தனியாக இந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா விரும்பவில்லையாம்.ஐதராபாத்தில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

மீராஜாஸ்மினும் விழாவுக்கு வர மறுத்துவிட்டாராம். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க கூட்டங்களிலும் மீராஜாஸ்மின் கலந்து கொள்ளவில்லையாம். இருவர் மீதும் நடிகர்கள், நிர்வாகிகள் கோபத்தில் உள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts