ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படைகள் தலிபான் தீவிரவாதிகளை குண்டு வீசி தாக்கி அழித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று கந்தகாரின் தென் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே, அமெரிக்க ராணுவத்தினர் அப்பகுதியில் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது, அக்குண்டு தவறுதலாக அதிபர் கர்சாயின் உறவினர் மொகமது கர்சாய் (65) என்பவரது வீட்டின் மீது விழுந்தது.
இதனால் அவர் பரிதாபமாக இறந்தார். குண்டுவீச்சில் அவரதுவீடு இடிந்து தரைமட்டமானது. மேலும், தீவிரவாதி என நினைத்து அவரது மகனும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த தகவலை அதிபர் கர்சாயின் சகோதரர்கள் அக்மத் வாலி கர்சாய் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தலிபான்களின் செய்தி தொடர்பாளர் குவாரி யூசுப் அக்மதி கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்கர்கள் யாருக்கும் நண்பர்கள் அல்ல. அவர்கள் தலிபான்களை கொன்று வருகின்றனர். அவர்களுக்கு உதவி புரிபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் கொலை செய்வோம்“ என தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment