background img

புதிய வரவு

காதல் உணர்வு ஏற்படும்; “மனிதரைப் போன்று எலியும் பாடுகிறது”; ஆய்வில் தகவல்

பொதுவாக, மனிதர்களிடையே காதல் உணர்வு ஏற்படும்போது பாடத் தோன்றும். அதே போன்ற நிலை எலிகளுக்கும் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எலிகளிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது “செக்ஸ்” உறவுக்காக ஆண் எலிகள் பெண் எலிகளை பாட்டுப் பாடி அழைக்கின்றன. அதன் “கீச்... கீச்.... என்ற சத்தத்தை கேட்டு தனது சந்ததிக்கு தந்தையாகும் தகுதி எந்த ஆண் எலிக்கு உள்ளது என்பதை பெண் எலிகள் கண்டறிகின்றனர்.

பின்னர் அதனுடன் உறவு கொள்கின்றன. அப்போது ஆண் எலி வெளியிடும் “கீச்” என்ற ஒலியுடன் கூடிய சத்தத்தை பாட்டு என விஞ்ஞானிகள் வர்ணித்துள்ளனர். இதே கருத்தை கடந்த 2005-ம் ஆண்டிலேயே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

பறவைகளும், திமிங்கிலங்களும் “செக்ஸ்” உறவுக்கு தங்களின் இணையை தேடுவதற்கு இதே நிலையைதான் கையாளுகின்றன என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts