background img

புதிய வரவு

ஜப்பான் சுனாமியை தொடர்ந்து ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்

சென்னை: ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது.

இந்தோனேஷியாவில் 2004ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு தமிழகத்தை சுனாமி தாக்கியதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளி்ல் கடல் உள்வாங்குவதும் கடல் நீர்மட்டம் தாழ்வதும் அடிக்கடி நடந்தது. பின்னர் இந்த நிகழ்வுகள் நின்று போயின.

இந் நிலையில் நேற்று ஜப்பானில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு அந் நாட்டை சுனாமி புரட்டிப் போட்ட நிலையில், தமிழகத்தில் வங்கக் கடல் ஆங்காங்கே உள்வாங்கியுள்ளது.

நேற்றறு பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. நீர்மட்டம் மிகவும் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

அதேபோல ராமேஸ்வரத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலும் கடல் உள்வாங்கியது. சிறிது தூரத்துக்கு மணல் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தது.

இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் பீதி ஏற்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிரண்டு கடற்கரையில் இருந்து வெளியேறினர்.

இன்று காலையில் ராமேஸ்வரம் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் இந் நிலையில் இன்று வழக்கத்துக்கு மாறாக ராமேஸ்வரம் கடல் மிக மிக அமைதியாக காட்சி அளித்தது. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அரபிக்கடல் பகுதியும், இந்திய பெருங்கடல் பகுதியும் சீற்றத்துடன் காணப்பட வங்காள விரிகுடா கடல் பகுதி மிக மிக அமைதியாக அலைகளே எழும்பாமல் காணப்பட்டது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts