background img

புதிய வரவு

தமிழகம் முழுவதும் தனியார் பால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்வு

பால் வினியோகத்தில் அரசின் ஆவின் நிறுவனமும், தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதும் பொது மக்களுக்கு வழங்கப்படும் பாலின் விலை உயர்த்தப்படவில்லை.

பால் உற்பத்தியாளர்கள் சமீபத்தில் நடத்திய போராட்டத்தை யொட்டி அரசு எருமைப் பாலுக்கு 80 காசு உயர்த்தி வழங்கியது. இதைத் தொடர்ந்து ஆரோக்கியா, ஹெரிட்டேஜ், திருமலா, டோட்லா போன்ற தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி விட்டன.

ஆரோக்கியா பால் கடந்த 15 நாட்களுக்கு முன்பே விலை உயர்வை அறிவித்தது. மற்ற தனியார் பால் நிறுவனங்கள் நேற்று முதல் பால் விலையை உயர்த்தி உள்ளன. தனியார் பால் விலை உயர்ந்த போதிலும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட வில்லை.

ஆவின் பால் லிட்டர் (3 சதவீத கொழுப்பு) ரூ.20.50 ஆகும். அதே அளவான தனியார் பால் விலை லிட்டர் ரூ.28. 4.5 சதவித கொழுப்பு உள்ள ஆவின் பால் லிட்டர் ரூ.26 தனியார் பால் ரூ.31, 6.5 சதவித கொழுப்பு உள்ள ஆவின் பால் (புள்கிரீம்) லிட்டர் ரூ.28. தனியார் பால் ரூ.36. தனியார் பால் விலைக்கும் ஆவின் பால் விலைக்கும் அதிக வித்தியாசம் இருப்பதால் பொது மக்கள் ஆவின் பாலை அதிகம் நாடிச் செல்கிறார்கள்.

இதனால் ஆவின் பால் தட்டுப்பாடாக உள்ளது. சென்னையில் நாள் ஒன்றுக்கு 10.5 லட்சம் லிட்டர் பால் வினியோகிக்கப்படுகிறது. தனியார் பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் வினியோகஸ்தர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts