தேவையானவை:
பச்சரிசி - 1 கிலோ
புழுங்கல் அரிசி - 1 கிலோ
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 3 டம்ளர்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கறிவேற்பிலை, உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, புழுங்கலரியை நன்றாகக் கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிக்கவும். தண்ணீர் வடிந்ததும், வெயிலில் உலர்த்தி நன்றாக ஈரப்பதம் இல்லாமல் காய வைத்து எடுக்கவும்.
காயவைத்த அரிசியுடன் துவரம் பருப்பைச் சேர்த்து மாவு மிஷினில் கொடுத்து உப்புமாவிற்கு ஏற்ற மாதிரி அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை ரவை சல்லடையில் போட்டு சலித்து அதில் உள்ள மாவை எடுத்துவிட்டு உப்புமா ரவையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உப்புமா செய்ய நினைக்கும் போது, 1 கப் உப்புமா ரவையை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பிறகு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி உப்புமா ரவையைக் கொட்டி கிளறி, 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கிளறவும்.
உப்புமா நன்கு வெந்து தளதளவென்று இருக்கும் போது இறக்கிவிடவும்.

0 comments :
Post a Comment