background img

புதிய வரவு

இன்றைய பேச்சு திடீர் ரத்து : தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு சவ்., சவ்., வாக இழுக்கிறது ;அடுத்து என்ன?

சென்னை : தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து இன்று நடப்பதாக இருந்த 4 ம் கட்ட பேச்சு திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன்வைத்ததாலும், 48 இடங்கள் ஒதுக்கப்படும்; ஆட்சியில் பங்கு என்பதை ஏற்க முடியாது என்று தி.மு.க., தரப்பில் கூறப்பட்டதாலும், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

முதற்கட்ட பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் ஐவர் குழு, கட்சித் தலைவர் சோனியாவிடம் தெரிவித்தது. அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க., முன்வைத்த திட்டத்தை, சோனியா ஏற்கவில்லை. மாற்றுத் திட்டத்தை அளிக்குமாறு தி.மு.க.,வை அவர் கேட்டுக் கொண்டார். அப்போது, பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்குமாறு தி.மு.க., சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, தி.மு.க., - காங்கிரஸ் இடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. காங்கிரஸ் 90 தொகுதிகள் வேண்டும் என்பதிலிருந்து பின்வாங்காமல் இருந்தது. தி.மு.க., தரப்பில் 53 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், இரண்டாம் கட்டப் பேச்சிலும் முன்னேற்றம் இல்லாததால் இழுபறி ஏற்பட்டது.

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ஐவர் குழுவினர் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் தலைவர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், தொகுதிப் பங்கீட்டை இதற்கு மேல் இழுத்தடிக்காமல் உடனே முடிக்க இரு தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, குலாம் நபி ஆசாத்தை சென்னைக்கு அனுப்பி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் நேரடியாக பேச முடிவெடுக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத் நேற்றிரவு சென்னை வந்தார்.

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் முதல்வர் கருணாநிதி இருவரும் சென்னை அறிவாலயத்தில் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று இரவு 9 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடந்தது. இருப்பினும், இதில், தொகுதி பங்கீடு தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. மூன்றாவது முறையாக நடந்த இந்த பேச்சு வார்த்தையிலும் தொடர்ந்து இழுபறி நீடித்தது.

இன்று ( வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், மீண்டும் குலாம்நபி ஆசாத்துடன் பேச்சு நடப்பதாக இருந்தது. இதனை, முதல்வர் கருணாநிதி உறுதிபட நேற்றிரவு தெரிவித்தார். இந்நிலையில் குலாம்நபி ஆசாத்தும், தமிழக காங்., தலைவருமான தங்கபாலு ஆகிய இருவரும் டில்லிக்கு புறப்பட்டு சென்று விட்டனர். இதனால் இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முடிந்து விட்ட தொகுதிகள்? : தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க., - 31, விடுதலை சிறுத்தைகள் - 10, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு 7 தொகுதிகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 3, மூவேந்தர் முன்னணி கழகம் - 1 என்ற கணக்கில் இதுவரை 52 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.எஞ்சியுள்ள 182 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு ஒதுக்கியது போக மீதி தொகுதிகளில், கூட்டணியில் இடம் பெறும் இதர கட்சிகளுக்கும் ஒதுக்கிவிட்டு, கடந்த முறையைப் போல் குறைந்த இடங்களிலேயே தி.மு.க., போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கருணாநிதியின் கணக்கு: தற்ப்போது கூட்டணிக்கு பிரித்து கொடுக்‌கப்பட்டது போக எஞ்சியிருப்பது 182 தொகுதிகள. இதில் காங்கிரசுக்கு 55 முதல் 60 வரை கொடுத்தாலும் 12 0 தொகுதிகளிலாவது தி.மு.க., போட்டியிட முடியும். இதில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 118 சீட்களாவது வேண்டும். தி.மு.க., எத்தனை தொகுதிகளில் ஜெயிக்கும் என்பது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு தெரியாமலா இருக்கும். எந்த தொகுதியில் தி.மு.க.,வுக்கு எத்தனை ஓட்டுக்கள் விழும் என அவருக்கு அத்துப்படி. இதனால் ஒரளவுக்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ,இந்த சிறு, சிறு கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்குரிய வழிமுறைகளை ஒரளவுக்கு அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டே காங்கிரசுக்கு அதிக இடம் கொடுக்க முடியாது என தி.மு.க., அழுத்தமாக கூறி வருகிறது.

இதற்கிடையில் இன்று காலையில் டில்லி புறப்பட்ட குலாம்நபி ஆசாத், நிருபர்களிடம் ‌கூறுகையில் நேற்றைய பேச்சு விவரம் குறித்து காங்., தலைவர் சோனியாவிடம் தெரிவிக்கப்படும். மீண்டும் ஒரு முறை தி.மு.க., காங்., நிர்வாகிகள் பேச்சு நடக்கும் என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts