background img

புதிய வரவு

தேர்தல் தேதியை மாற்றவேண்டும்: வைகோ

சென்னை:தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களின் இறுதித் தேர்வு மார்ச் 2ம்தேதி துவங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் 22ம் தேதி துவங்கி ஏப்ரல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை 11லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.பல்கலைக் கழக தேர்வுகள் ஏப்ரல் 5ம்தேதி துவங்கி மே 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் மார்ச் 20ம் தேதியில் இருந்து ஏப்ரல் 11ம்தேதி வரை தேர்தல் பிரசாரத்திற்கான உச்சக்கட்ட நாளாகும். தேர்தல் பிரசாரத்தில் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படும் என்பதால் இது மாணவர்களின் படிப்புக்கு இடையூறாக இருக்கும்.மேலும் சித்திரை திருநாள் என்பதால் ஏப்ரல் 14ம் தேதி வருகிறது. தமிழக அரசும் இந்த நாளை அம்பேத்கர் பிறந்த தினமாகஅறிவித்து விடுமுறை அளித்துள்ளது. சித்திரை திருநாள் தமிழகத்தில் ஒரு முக்கிய பண்டிகை திருநாளாகும்.மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டு இத்திருநாளை தமிழகம் முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். ஏப்ரல் 13ம்தேதி தேர்தல் நடத்தப்படுவதால் அந்த நாளும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.16ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். இடையில் 15ம்தேதி ஒரு நாள் மட்டுமே இருக்கிறது.
தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அரசு ஊழியர்கள் 12ம் தேதியே விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் தங்ககள் விடுமுறை நாட்களை சொந்த ஊரில் கொண்டாட போய்விடுவார்கள்.தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியது ஜனநாயக கடமை. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டுச்சாவடிக்கு வந்து வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். ஆகவே தேர்தல் தேதியை ஒத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts