சென்னை:சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பி தி.மு.க.,வில் மனு தாக்கல் செய்தவர்கள் மூலம் வசூலான தொகை பல கோடி ரூபாயை தாண்டியிருக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சட்டசபை தேர்தலில் போட்டியிட பிப்., 25ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மார்ச் 7ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், விருப்ப மனுக்கள் மார்ச் 5ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 8ம் தேதி முதல் விருப்ப மனு பெற்றவர்களிடம் நேர்காணல் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், மனு தாக்கல் செய்ய இரண்டு நாட்களே இருந்ததால், விருப்ப மனு தாக்கல் சுறுசுறுப்பு அடைந்தது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் மனு தாக்கல் செய்தனர்.கடந்த ஏழு நாட்களில் மட்டும் சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர். இன்று அமாவாசை என்பதால், மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோர் 5,000 ரூபாயும், மகளிர் மற்றும் தனித் தொகுதியில் போட்டியிடுவோர் 2,500 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் மூலம் இதுவரை பல கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.நாளை இறுதி நாள் என்பதால், தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வசூலான தொகையின் மொத்த மதிப்பு ஆகியன தெரிய வரும் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வில் விருப்ப மனு மூலம் 12.50 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

0 comments :
Post a Comment