background img

புதிய வரவு

வருண் திருமண ஏற்பாடுகள் மும்முரம்

வாரணாசி:பா.ஜ., எம்.பி., வருண் திருமண ஏற்பாடுகள் வாரணாசியில் தீவிரமாக நடந்து வருவதையொட்டி, திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.முன்னாள் மத்திய அமைச்சர் மேனகாவின் மகனும், தற்போதைய பா.ஜ., எம்.பி.,யுமான வருணுக்கும், கிராபிக் டிசைனராக பணியாற்றும் யாமினி ராய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும்6ம் தேதி வாரணாசியில் நடக்கிறது. இதில், காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் பா.ஜ., முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்துக் கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தனது திருமண அழைப்பிதழை, காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் நேரில் வருண் அளித்தார். எனவே, சோனியா இந்த திருமணத்தில் கலந்துக் கொள்ளலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த மேனகாவின் தாயார் அஷ்வதேஷ் ஆனந்த் நேற்று முன்தினம் காலமானார். இதனால், வருணின் திருமணம் தள்ளிப் போகலாம் என்று கூறப்பட்டது.
ஆனால், இது குறித்து, வருண் தரப்பிலிருந்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. திருமண ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே, வருண் திருமணம் திட்டமிட்ட தேதியில் நடக்கும் என்று தெரிகிறது.நேரு - இந்திரா குடும்பத்தில், பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, திருமண நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்காவின் திருமணம் கடந்த 1997ம் ஆண்டில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts