background img

புதிய வரவு

பெட்ரோல் மீதான விற்பனை வரி குறைப்பு: முதல்வர் கருணாநிதி

சென்னை:பெட்ரோல் மீதான விற்பனை வரியை 30 சதவீதத்தில் இருந்து, 27 சதவீதமாக குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் 38 காசு குறையும்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு:உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதால், எண்ணெய் நிறுவனங்கள், அதற்கேற்ப பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிக்கிறது. இதனால், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவதை மனதில் கொண்டு, தமிழக அரசு தன்னால் இயன்ற அளவு, அவ்வப்போது அதற்குரிய விற்பனை வரியை குறைத்து அறிவிப்பதை மக்கள் நன்கறிவர்.பெட்ரோல் பொருள்களின் விலையை மத்திய அரசு உயர்த்தும் போது, தமிழக அரசுக்கான நிர்வாகச் செலவு அதிகமாகிறது. மத்திய அரசு பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி, உயர்த்துவதால், நடுத்தர மக்கள் குறிப்பாக, இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் பெரிதும் பாதிக்கப்படக் கூடாது.

இதற்காக, தமிழக அரசு பெட்ரோல் மூலம் தனக்கு கிடைக்கும் விற்பனை வரியை ஓரளவு குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தற்போது பெட்ரோல் மீது தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீதம் விற்பனை வரியை 3 சதவீதம் குறைத்து, 27 சதவீதம் மட்டும் வசூலிப்பதென்று முடிவு செய்துள்ளது.இதனால், ஆண்டுக்கு தமிழக அரசுக்கு 210 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். பெட்ரோல் பயன்படுத்துவோருக்கு லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 38 காசு குறையும். விலை குறைப்பு உடனே அமலுக்கு வரும். விற்பனை வரியை குறைத்த பின், தமிழகத்தில் உள்ள 27 சதவீத விற்பனை வரி என்பது, தென் மாநிலங்களிலேயே மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts