background img

புதிய வரவு

செங்கல்பட்டில் இன்று விஜயகாந்த் பிரசாரம்

செங்கல்பட்டில் இன்று விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார். செங்கல்பட்டு தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து விஜயகாந்த் இன்று செங்கல்பட்டில் பிரசாரம் செய்கிறார். மதியம் செங்கல்பட்டிற்கு வரும் அவர் பழைய பஸ் நிலையம், கூடுவாஞ்சேரி மற்றும் முக்கிய பகுதியில் பிரசார வேனில் நின்றபடி தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

பின்னர் பிரசாரத்தை முடித்து விட்டு விஜயகாந்த் சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர் வழியாக தாம்பரம் செல்கிறார். தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து வேட்பாளரை ஆதரித்தும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts