background img

புதிய வரவு

சோதனையில் ரூ.40 கோடி சொத்து கண்டுபிடிப்பு; அனுஷ்கா, நாகார்ஜுனாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை அனுஷ்கா வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். அனுஷ்கா சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிவபிர சாத்ரெட்டி, வெங்கட் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.

விசாகப்பட்டினத்தில் இவர்கள் சொந்தமாக வீடுகள் வாங்கி இருப்பதாகவும் அதற்கு வருமான கணக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை ஏற்பட்டது. இதில் ஏராளமான சொத்து பத்திரங்கள், தஸ்தா வேஜூக்கள், ரொக்கப் பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன. அவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

அப்போது சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டது பற்றி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரூ.40 கோடிக்கு புதிதாக சொத்துக்கள் வாங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி அனுஷ்காவுக்கும் நாகார்ஜுனாவுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் இது போல் அனுப்பப்பட்டு உள்ளது.

தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ளார் அனுஷ்கா. ஒரு படத்துக்கு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts