உலக கோப்பை முதல் போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக ஷேவாக் 175 ரன்கள் எடுத்தார். அதே போல இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தெண்டுல்கர் 120 ரன்கள் குவித்தார்.இதனால் உலக தர வரிசையில் இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.சர்வதேச கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் வீரர்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டது.
உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்ததன் மூலம் ஷேவாக் 6 இடங்கள் முன்னேறி தர வரிசையில் 6-வது இடத்தை பிடித்து உள்ளார். தெண்டுல்கர் 5 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.அதே போல சிறப்பான பந்து வீச்சு மூலம் ஜாகீர்கான் 9 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், ஹர்பஜன்சிங் 4 இடங்கள் முன்னேறி 16-வது இடத்தையும், முனாப் பட்டேல் 11 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தையும் பிடித்து உள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 158 ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஸ்டிராஸ் 8 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்து உள்ளார். பேட்டிங் தர வரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா முதலிடத்திலும், பந்து வீச்சு தர வரிசையில் நியூசிலாந்து வீரர் வெட்டோரி முதலிடத்திலும் உள்ளனர்.

0 comments :
Post a Comment