background img

புதிய வரவு

பலத்த மழை: பொலிவியாவில் நிலச்சரிவு; 400 வீடுகள் மண்ணில் புதைந்தன

தென்அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுகிறது. ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ரோடுகள் சேதமடைந்துள்ளன. இந்த மழைக்கு மலை பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் லா பாஷில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 400 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இதனால் பலர் சேற்றுக்குள் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். மண்ணுக்குள் புதைந்து கிடப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் லாபாஷ் நகரில் இது போன்ற கடுமையான நிலச்சரிவு இதுவரை ஏற்பட்டதில்லை என கவர்னரின் செய்தி தொடர்பாளர் எட்வின் ஹெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக இங்கு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது வரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts