நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.

0 comments :
Post a Comment