மேற்குவங்கத்தில், மம்தா பானர்ஜி 20.05.2011 அன்று முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோனியாவிற்கு பதிலாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்கேற்க உள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு இடதுசாரிகள் கட்சி சார்பில் அதன் பிரதிநிதிகள் கலந்து கொள்வர் என்று அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி, 184 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக நடந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் நடந்தது. இதில், கட்சியின் சட்டசபை தலைவராக மம்தாவும், துணைத் தலைவராக பார்த்தா சட்டர்ஜியும், தலைமை கொறடாவாக, சுபந்தேவ் சட்டோபாத்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பதவியேற்பு விழாவிற்கு வருமாறு சோனியா காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் மம்தா பானர்ஜி. சோனியா காந்தியை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார்.

0 comments :
Post a Comment