background img

புதிய வரவு

"ஆல்-ரவுண்டர்' ஹர்பஜன்: தோனி புகழாரம்!:வெற்றி உற்சாகத்தில் இந்திய வீரர்கள்


கேப்டவுன்: கேப்டவுன் ஒரு நாள் போட்டியில் "திரில்' வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர். இவ்வெற்றிக்கு கைகொடுத்த ஹர்பஜனை மிகச் சிறந்த "ஆல்-ரவுண்டர்' என, கேப்டன் தோனி வாயார பாராட்டியுள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி, கேப்டவுனில் நடந்தது. இதில், முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 49.2 ஓவரில் 220 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
யூசுப் அரைசதம்:
அடுத்து களமிறங்கிய இந்திய அணி, திணறல் துவக்கம் கண்டது. முரளி விஜய்(1), ரோகித் சர்மா(23), கேப்டன் தோனி(5), யுவராஜ்(16) ஏமாற்றினர். பின் ரெய்னா, யூசுப் பதான் இணைந்து அதிரடியாக ஆடினர். ரெய்னா 37 ரன்கள் எடுத்தார். போத்தா ஓவரில் மூன்று இமாலய சிக்சர்கள் விளாசிய யூசுப், திருப்புமுனை ஏற்படுத்தினார். அரைசதம் கடந்த இவர் (59) ரன்களுக்கு வெளியேற, "டென்ஷன்' ஏற்பட்டது.
ஹர்பஜன் அசத்தல்:
இந்த நேரத்தில் ஹர்பஜன் பொறுப்பாக பேட் செய்தார். சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு சதம் அடித்த அசத்திய இவர், இம்முறையும் அணிக்கு கைகொடுத்தார். பர்னல் மற்றும் மார்கல் ஓவரில் தலா ஒரு சிக்சர் விளாசி, வெற்றிக்கு உதவினார். இந்திய அணி 48.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்பஜன்(23) அவுட்டாகாமல் இருந்தனர். இவ்வெற்றியின் மூலம் இந்திய அணி, தொடரில் 2-1 என்ற முன்னிலை பெற்றது.
தென் ஆப்ரிக்க மண்ணில் மீண்டும் ஒரு முறை "திரில்' வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் காணப்படுகின்றனர்.
இது குறித்து கேப்டன் தோனி கூறியது:
கேப்டவுன் போட்டியில் இந்திய அணியின் "பீல்டிங்' அருமையாக இருந்தது. "பவர் பிளே' மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் பவுலர்கள் அசத்தினர். பின் வரிசையில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் வெற்றிக்காக சிறப்பான முயற்சி மேற்கொண்டனர். இதில், பதான் ஆட்டம் "சூப்பராக' இருந்தது. தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதே போல இவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகிறேன். இன்னும் அதிகமான அனுபவம் பெறும் போது, அணியின் வெற்றி நட்சத்திரமாக உருவெடுப்பார்.
ஹர்பஜனை "ஆல்-ரவுண்டராக' தான் கருதுகிறோம். இருப்பினும், அப்படி அழைத்து அவருக்கு நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. பேட்டிங் மட்டுமல்லாமல் சுழலிலும் அசத்தினார்.
இவ்வாறு தோனி கூறினார்.
யூசுப் பதான் எச்சரிக்கை
தென் ஆப்ரிக்க அணிக்கு தான் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இந்திய வீரர் யூசுப் பதான் எச்சரித்துள்ளார். ஆட்ட நாயகன் விருது வென்ற இவர் கூறுகையில்,""ஆடுகளத்தில் பந்துகள் நன்கு "பவுன்ஸ்' ஆகின. இதனால், அவசரப்பட்டு "ஷாட்' அடிக்கவில்லை. பொறுமையாக விளையாடியதால், எனது ஆட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. இக்கட்டான தருணங்களில் இருந்து இந்திய அணி சிறப்பான முறையில் மீண்டுள்ளது. இதனால், தொடரை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். கடந்த இரு போட்டிகளில் தோல்வி அடைந்த தென் ஆப்ரிக்க அணி மிகப் பெரும் நெருக்கடியில் <உள்ளது, ''என்றார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts