பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று லாகூரில் காரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் கொள்ளையடிக்கும் நோக்குடன் இரண்டு பேர் ஆயுதங்களுடன், அவரது காரை நெருங்கியதாகவும், இதனையடுத்து அவர் தற்காப்புக்காக அவர்களை சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் லாகூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த,மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.போராட்டம் தீவிரமடைந்து வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட அமெரிக்க தூதரக அதிகாரியை கைது செய்து,காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் அந்த தூதரக அதிகாரியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment