background img

புதிய வரவு

ஏழைகளுக்கான ஆதரவை மத்திய அரசு திரும்ப பெறுகிறது: மார்க்சிஸ்ட் புகார்

ஏழைகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ஆதரவை மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாற்றியுள்ளது.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இக்குற்றச்சாற்றைக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்திய தலைவர்கள், நமது பொருளாதார கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்கும் மற்றும் நிர்வாக செய்யும் அரசாங்க மூத்த அதிகாரிகள் ஆகியோர்,ஏழைகளுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் ஆதரவை திரும்ப பெற வேண்டும் என்று ஏறக்குறைய ஒரே நேரத்தில் கூறி வருவதாக குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் கூட தமது குடியரசு தின விழா உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டக்கமிஷன் துணை தலைவர் அலுவாலியா,தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் குறித்து விடுத்துள்ள அறிக்கை, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோரும் வேலைக்கு அமர்த்துவது மற்றும் நீக்குவதில் கட்டுப்பாடற்ற போக்குக்கு சாதகமாகவே உள்ளனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts