background img

புதிய வரவு

ஈடன் கார்டன்: பிப்.7 வரை காலக்கெடு - ஐ.‌சி.‌சி.

கொல்கட்டாவில் உள்ள புகழ்பெ‌ற்ற ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணிகளுக்கு வரும் பிப்.7 ஆம் தேதி வரை ஐ.சி.சி. காலக்கெடு கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய 3 நாடுகளில் நடைபெறவுள்ளன.

இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி பிப்.27ஆம் தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானத்தை ஆய்வு செய்து ஐ.சி.சி. குழு, மைதானத்தை புதுப்பிக்கும் பணிகள் முடிவடையாததால், இந்தியா-இங்கிலாந்து போட்டி நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்றும், வேறு மைதானத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில், ஐ.சி.சி. தலைவர் சரத் பவார் பிப்.7 ஆம் தேதி வரையிலான காலக்கெடு முடிவை ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநில பொதுப் பணித்துறை, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மைதான பணிகளை முடித்துத் தருவதற்கு உதவுவதாக பெங்கால் கிரிக்கெட் வாரியத்திற்கு உறுதி அளித்துள்ளதை அடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா, நேற்று மேற்கு வங்க பொதுப்பணித் துறையிடம் மைதானப் பணிகளை முடித்துத் தரும்படி உதவி கோரியதாகவும், அதனையடுத்து பொறியாளர் குழு ஒன்று இன்று மைதானக் கட்டுமானப் பணிகளை பார்வையிடச் செல்லவுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் கோஸ்வாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts