background img

புதிய வரவு

இரட்டையர் இறுதியில் பயஸ்-பூபதி இணை தோல்வி

ஆஸ்ட்ரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் 3ஆம் தரநிலையில் உள்ள இந்தியாவின் மகேஷ் பூபதி-லியாண்டர் பயஸ் ஜோடி, முதலாம் தரநிலை அமெரிக்க இரட்டையர் இணையான பிரயன் சகோதரர்களிடம் 3- 6, 4- 6 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவியது.

பிரையன் சகோதரர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றனர்.

தங்களது 4-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் கனவுடன் இறுதி வரை முன்னேறி வந்த பயஸ்-பூப்தி இணை முதல் செட்டில் சர்வ்களை வென்று 2- என்று தங்கள் சர்விற்கு வந்தனர். ஆனால் அந்த சர்வை பிரையன் சகோதரர்கள் முறியடித்து 4- 2 என்று முன்னிலை வகித்தனர்.

பிறகு அபாரமான சர்வ்களை வீசிய பாப் பிரையன், மைக் பிரையன் அடுத்த சர்வை தக்கவைத்து 5- 2என்று முன்னிலை வகித்தனர். பூபதி, பயஸ் அடுத்த சர்வை வெல்ல 3-5 என்று ஆனது.

ஆனால் அடுத்த சர்வை பிரையன் வீச ஒரே ஒரு ரிடர்ன் மட்டும் மகேஷால் அபாரமாக செய்ய முடிந்தது மற்றபடி வெளியே அடித்ததால் 6-3 என்று பிரையன் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது செட்டில் மகேஷ் முதல் சர்வைத் துவங்கி 40- 40 என்று டியூஸ் வரை சென்று அதன் பிறகு தன் சர்வை போராடி தக்கவைத்து 1-0 என்று முன்னிலை பெற்றார்.

பிரையன் தங்களது சர்வில் சோடை போகவில்லை இருவரும் அடுத்தடுத்து தங்கள் சர்வ்களை வென்று 4- 4 என்று சமநிலை வகித்தனர்.

அப்போது மகேஷ் வீசிய சர்வில் முதல் ஷாட்டை பயஸ் கோட்டைவிட்டார். அடுத்ததாக பிரையன் நன்றாக ரிடர்ன் செய்ய 0- 30 என்று பின் தங்கினர். பிறகு மீண்டும் பயஸ் வெளியே அடித்தார் இந்த சர்வை பிரையன் சகோதரர்கள் முறியடித்து 5- 4 என்று முன்னேறினர்.

பிறகு கடைசி சர்வை பிரையன் வீச மகேஷும், பயசும் 30- 0 என்று முன்னிலை பெற்றனர். பிரேக் வரும் என்று எதிர்பார்த்திருக்கையில் மகேஷ் அபாரமான ஷாட்டை அடித்தார் 40- 30 என்று மகேஷ்/பயஸ் பிரேக் வாய்ப்பை பெற்றனர்.

ஆனால் பிரையன் ஒரு அபாரமான ஏஸ் சர்வை வீச டியூஸிற்குச் சென்றது. அதில் ராலியில் இந்திய வீரர் வெளியே அடிக்க பிரையன் சகோதரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts