background img

புதிய வரவு

கொல்கட்டா ஆட்டம் பெங்களூருக்கு மாற்றம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறாது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தை பெங்களூருக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வைத்த பரிசீலனையை ஐ.சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

1 லட்சம் பேர் அமரும் வசதிகொண்ட கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் 4 ஆட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டிக்காக ஈடன்கார்டன் ஸ்டேடியம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடையாததால், கொல்கத்தாவில் நடக்க இருந்த இந்தியா-இங்கிலாந்து (பிப்ரவரி 27-ந் தேதி) ஆட்டத்தை அங்கு நடத்த முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மைதானத்தை ஆய்வு செய்த பின்னர் அறிவித்தது.

ஐ.சி.சி.யின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மூலமாக பெங்கால் கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்தது. அத்துடன் போட்டியை இழக்காமல் இருக்க மேற்குவங்காள அரசும் பகிரத முயற்சியில் இறங்கியது. ஐ.சி.சி.தலைவர் சரத்பவாரை தொடர்பு கொண்டு பலரும் வற்புறுத்தினார்கள்.

போட்டி அமைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 8 உறுப்பினர்களும் முடிவை மறுபரிசீலனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் சரத்பவார் பிரச்சினையில் இருந்து ஒதுங்கி கொண்டார். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் நடைபெறாது என்ற முடிவை ஐ.சி.சி, இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு முறைப்படி தெரிவித்துள்ளது. ஐ.சி.சி.யின் முடிவை சரத்பவார், மேற்குவங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா மைதானத்தில் போட்டியை நடத்த எடுத்த முயற்சி கைகூடாமல் போனதால் பெங்கால் கிரிக்கெட் சங்கம் மட்டுமின்றி ரசிகர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட கொல்கத்தா ஆட்டம் பெங்களூர் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தை பெங்களூரில் நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அளித்த பரிந்துரையை ஐ..சி.சி. ஏற்றுக் கொண்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts