background img

புதிய வரவு

பாஸ்கோ எஃகு தொழிற்சாலை அமைக்க சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி

ஒரிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் பாரதீப் துறைமுகத்திற்கு அருகே தென் கொரியாவின் போஹாங் ஸ்டீல் கம்பெனி (பாஸ்கோ) தனது எஃகு உருக்காலையை அமைக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் நிபந்தனையுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஓராண்டுக் காலமாக அனுமதி அளிக்காமல் இருந்த அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பில் உள்ள சுற்றுச் சூழல் மற்றம் வன அமைச்சகம், சுற்றுச் சூழல் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகங்கள் அமைத்த கூட்டுக் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 2007ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட நிபந்தனையுடன் மேலும் 32 நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜதாதர்மோஹன் நதிக் கரைக்கும் பாரதீப் துறைமுகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் 1,620 ஹெக்டேர் நிலத்தில் பாஸ்கோவின் எஃகு உருக்காலை அமையவுள்ளது. இதில் 1,253 ஹெக்டேர் வனப் பகுதியாகும். வருடத்திற்கு 1.2 கோடி மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யும் திறன் கொண்டது பாஸ்கோ அமைக்கவுள்ள தொழிற்சாலையாகும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts