மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தாமஸ் கேரளாவில் பணியாறியபோது நடந்த பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டு,அவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட தேர்வுக் குழு தாமஸை தேர்ந்தெடுத்தது குறித்து, ஒரு தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது,தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது குறித்து தேர்வுக் குழுவுக்கு தெரியாது என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில், வழக்கறிஞர் அவ்வாறு கூறவில்லை என்று பின்னர் மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் இன்று இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் மீது பாமாயில் இறக்குமதி மீது ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பது குறித்து தேர்வுக் குழு முன்னரே விவாதித்திருந்ததாகவும், இதனை மக்களவை எதிர்கட்சித் தலைவரும், தேர்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் ஒப்புக்கொண்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

0 comments :
Post a Comment