புதுடில்லி:நேபாள ஜனாதிபதி ராம்பரன் யாதவ், நம்நாட்டில் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.நேபாள நாட்டின் முதல் ஜனாதிபதியான ராம்பரன் யாதவ், நேற்று கோல்கட்டா வந்தார். ராம் பரன் யாதவ், கோல்கட்டா பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர். எனவே, இங்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். சண்டிகார் மருத்துவக் கல்லூரியில் அவர் எம்.டி., பட்டம் பெற்றுள்ளார். எனவே, அடுத்த வாரம் அங்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.இதற்கிடையே, அவர் திருமலை சென்று வெங்கடாஜலபதியை தரிசிக்க உள்ளார். டில்லியில் உள்ள மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து கொள்கிறார். அதன் பின் தான் அவர், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இவரது பயணத்தின் போது இருநாட்டுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
0 comments :
Post a Comment