background img

புதிய வரவு

ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு உளவா‌ளியாக செய‌ல்ப‌ட்ட மு‌ன்னா‌ள் இ‌ந்‌திய இராணுவ அ‌திகா‌‌ரி உ‌ள்பட 3 பே‌ர் கைது

பா‌கி‌ஸ்தா‌ன் புலனா‌ய்வு‌த்துறை‌க்கு (ISI) உளவா‌ளியாக செய‌ல்ப‌ட்ட மு‌ன்னாள‌் இ‌ந்‌திய இராணுவ அ‌திகா‌‌ரி உ‌ள்பட 3 பே‌ர் ச‌ண்டிக‌ரி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

ச‌ட்டீ‌ஸ்க‌ரி‌ல் உ‌ள்ள இராணுவ மைய‌ம் அருகே இவ‌ர்க‌ள் 3 பேரு‌ம் இ‌மா‌ச்சல ‌பிரதேச ‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ரா‌ல் ‌பிடி‌ப‌ட்டு‌ள்ளன‌ர்.

அவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், ‌ஷியா‌ம் சு‌ந்த‌ர் லி‌‌பியா எ‌ன்பவ‌ர் இ‌ந்‌திய இராணுவ அ‌திகா‌ரியாக ப‌ணியா‌ற்‌றி ஓ‌ய்வு பெ‌ற்றவ‌ர் எ‌ன்று தெ‌ரியவ‌ந்தது.

தொட‌ர்‌ந்து அவ‌ர்க‌ளிட‌ம் நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், இராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள மு‌க்‌கிய தகவ‌ல்களை ரக‌சியமாக பா‌கி‌‌ஸ்தா‌ன் புலனா‌ய்வு‌த்துறையுட‌ன் ப‌கி‌ர்‌ந்து வ‌ந்து‌ள்ளது‌‌ம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வட மா‌நில‌ங்க‌ளி‌‌ல் உ‌ள்ள மு‌ன்னா‌ள் இராணுவ‌த்‌தினரை த‌ங்க‌ள் ப‌க்க‌ம் இழு‌ப்ப‌தி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் புலனா‌ய்வு‌த்துறை ‌தீ‌விர‌ம் கா‌ட்டி வரு‌வதாகவு‌ம், இராணுவ‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் பல‌ர் ஐ.எ‌ஸ்.ஐ உளவா‌ளிகளாக செய‌ல்ப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பதாகவு‌‌ம், அவ‌ர்களை க‌ண்ட‌றியு‌ம் ப‌ணிகளை முடு‌க்‌கி ‌வி‌ட்டிரு‌ப்பதாகவு‌ம் ‌சி.ஐ.டி காவ‌ல்துறை‌யின‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

கட‌‌ந்த மாத‌ம் 27ஆ‌ம் இமா‌ச்சல ‌பிரதேச‌ம் க‌ங்ரா மாவ‌ட்ட‌த்த‌ி‌ல் மு‌ன்னா‌ள் இராணுவ அ‌திகா‌ரி தா‌ஸ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts