background img

புதிய வரவு

இராசாவிடம் ம.பு.க. 9 மணி நேரம் விசாரணை

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து புலனாய்வு செய்துவரும் மத்திய புலனாய்வுக் கழகம், தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவிடம் இன்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குற்றச்சாற்றைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி பதவி விலகிய ஆ.இராசாவிடம், டிசம்பர் 24, 25 தேதிகளில் ம.பு.க. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஒரு மாதம் கழித்து இன்றைக்கு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்றைய விசாரணையில், அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடல், அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் உரிமம் வழங்கும் தேதியை முன்னறிவிப்பின்றி முன்னரே மாற்றியது, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் உரிமை கொடுத்தது என்பன உள்ளிட்ட விவகாரங்களின் பின்னணி குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி, டெல்லி, சென்னை, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இராசாவின் சொந்த வீடு ஆகிய இடங்களில் ம.பு.க. நடத்திய சோதனையில் கைப்பற்ற ஆவணங்கள் தொடர்பாகவும் இன்று அவரிடம் விசாரிக்கப்பட்டதெனவும், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசின் கணக்காய்வாளர் மற்றும் தணிக்கையாளர் அளித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் இராசாவிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts