கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. விலை ஏறுவதும் இறங்குவதுதாக உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.14 ஆயிரத்து 824 ஆக இருந்தது.
நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.144 அதிகரித்து ரூ.14 ஆயிரத்து 928 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.264 குறைந்தது. ஒரு பவுன் ரூ.14 ஆயிரத்து 664 ஆக உள்ளது.
ஒரு கிராம் ரூ.1833க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை குறைவுக்கு சர்வதேச மார்க்கெட்டில் ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு உயர்வே காரணம் என கூறப்படுகிறது.
மேலும் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.41 ஆயிரத்து 440 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.35 ஆகவும் உள்ளது.
0 comments :
Post a Comment