
இப்படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடிக்கிறார். பல வருடங்களுக்கு முன்பு வந்த “மூன்று முகம்” படத்தில் ரஜினி 3 வேடத்தில் நடித்தார். அதில் அவரது “அலெக்ஸ் பாண்டியன்” கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் 3 வேடத்தில் நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணி படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இது உருவாகிறது. ரஜினிக்கு இதில் இரண்டு ஜோடிகள். தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிப்பார்கள் என பேச்சு அடிபடுகிறது.
தீபிகா படுகோனே இதுபற்றி கூறும்போது,
ரஜினியுடன் நடிக்க என்னை அணுகினர். அவருக்கு ஜோடியாவது பெருமையான விஷயம். கால்ஷீட் பிரச்சினை இருக்கிறது என்றார். ரஜினியுடன் நடிக்க இந்த சந்தர்ப்பத்தை விட்டால் வேறு வாய்ப்பு அமையாது என்று கருதுகிறார். வேறு படங்களுக்கு கொடுத்த தேதிகளை 'ராணா' படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளார்.
இன்னொரு நாயகியான அனுஷ்கா தெலுங்கில் பிரபல நடிகையாக உள்ளார். தமிழில் சூர்யாவுடன் “சிங்கம்”, விஜய்யுடன் “வேட்டைக்காரன்” படங்களில் நடித்துள்ளார். “ராணா” படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஆக்கர் ஸ்டூடியோஸ் மற்றும் ஈராஸ் இண்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
0 comments :
Post a Comment