background img

புதிய வரவு

வரி ஏய்ப்பு விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்வோம்: சுவிட்சர்லாந்து

தங்கள் நாட்டை வரியற்ற சுவர்க்கம் என்ற அழைக்கப்படுவதை ஏற்க மறுத்துள்ள சுவிட்சர்லாந்து அரசு, இந்தியாவுடன் தாங்கள் செய்துக் கொண்டுள்ள இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை இந்திய அரசிற்கு அளிப்போம் என்று கூறியுள்ளது.

என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த சுவிட்சர்லாந்து அரசின் நிதி அமைச்சகச் செயலர் மைக்கேல் ஆம்புல், “இந்தியாவுடன் இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் (Double Taxation Avoidance Agreement - DTAA) செய்துக்கொண்டுள்ளோம். இது எங்களது நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதன் பிறகு வரி ஏய்ப்பாளர்கள் பட்டியலை (சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்களை) இந்திய அரசுக்கு அளித்திடுவோம். இப்பிரச்சனையில் இரு அரசுகளும் நிர்வாக ரீதியாக ஒன்றுக்கு ஒன்று உதவிடும்” என்று கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts