இது தொடர்பாக ம.தி.மு.க தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி 22ஆம் தேதி வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கயல்விழியை விடுவித்துத் தமிழகம் கொண்டு வந்தது சேர்த்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்தும், தமிழக மீனவர் பிரச்சனை குறித்தும் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுத்து, தனது கருத்துகளையும் தெரிவித்தார்.
ஆனால், அதே நாளில் புஷ்பவனத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார், இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி குறித்து அதிர்ச்சியையும், கண்டனத்தையும் தெரிவித்து ஜனவரி 23ஆம் தேதி வைகோ அவர்கள் பிரதமருக்குத் தொலைநகல் செய்தி அனுப்பினார்.
ஜனவரி 25ஆம் தேதியிட்டு பிரதமர், வைகோவுக்கு எழுதியுள்ள கடிதம் இன்று கிடைத்தது.
0 comments :
Post a Comment