background img

புதிய வரவு

கெய்ரோவில் அவரச நிலை பிரகடனம்

எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலகக் கோரி தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும், கலவரமும் நடந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி மக்கள் லட்சக்கணக்கில் 5வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல் துறைக்கும் இடையே மோதலும் வலுத்து வருகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பிரச்சனையை சமாளிக்க தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts