தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்த இலங்கையை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தினார்.
டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் கருணாநிதி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, ஒரே மாதத்தில் தமிழக மீனவர்கள் 2 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது குறித்து பிரதமரிடம் தனது கவலையை தெரிவித்துள்ளார்.
மேலும் மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்த இலங்கையை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரை அப்போது கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிற்பகலில் ஜன்தக் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டிற்கு செல்லும் கருணாநிதி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

0 comments :
Post a Comment