தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு இன்று வரவிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையின்போது தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திருச்செந்தூருக்கு இன்று வருகிறார்.
இந்நிகழ்ச்சிகளை ஒட்டி, திருச்செந்தூர் நகர் முழுவதும் வைக்கப்பட்டிருந்த அவரது உருவம் பொறித்த பேனர்கள், விளம்பரத் தட்டிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்டன.
இந்த விளம்பர பேனர்களால் பொதுமக்களுக்கும் தங்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகக் கூறி கடை வியாபாரிகள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின்போது சில டிஜிட்டல் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வியாபாரிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நேற்றிரவு இது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்நிலையில் காவல்துறையினரின் தடியடியை கண்டித்தும், இந்த நிகழ்வுக்கு காரணமாக இருந்தவர்களைக் கைது செய்யக் கோரியும், திருச்செந்தூர் நகருக்கு வருகை தரும் திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குரும்பூர், ஆத்தூர் ஆகிய இடங்களில் வர்த்தகர்கள் சங்கங்களின் சார்பில் இன்று வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

0 comments :
Post a Comment