background img

புதிய வரவு

ஆஸ்ட்ரேலிய ஓபன் சாம்பியன் ஆனார் கிளைஸ்டர்ஸ்


ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதன் முறையாக இறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்த சீன வீராங்கனை லீ நா என்பவரை பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் 3- 6, 6- 3, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

டென்னிஸிற்கு ஓய்விலிருந்து மீண்டும் வந்துள்ள கிம் கிளைஸ்டர்ஸ் வெல்லும் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது. முதலில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

அரையிறுதியில் நம்பர் 1 டென்மார்க் வீராங்கனை வோஸ்னியாக்கியை அவரது வெற்றி நிலையிலிருந்து முறியடித்து வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்த லீ நா, முதல் செட்டை அனாயசமாக 6- 3 என்று கைப்பற்றி கிளைஸ்டர்சுக்கு அதிர்ச்சியளித்தார்.

இரண்டாவது செட்டில் இருவரும் மாறி மாறி தங்கள் சர்வ்களை இழந்து 2- 2 என்று சமநிலை வகித்தனர். பிறகு இருவரும் தங்களது சர்வில் வெற்றி பெற்று 3- 3 என்று வந்தனர்.

ஆனால் அதன் பிறகு லீ நா ஓரிருமுறை இரட்டைத் தவறுகளை தன் சர்வில் செய்ய தொடர்ந்து தனது சர்வில் தோல்வி தழுவினார். கிம் கிளைஸ்டர்ஸ் அதனை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சில அபாரமான ஃபோர்ஹேண்ட் ஷாட்களை அடித்து ஆதிக்கம் செலுத்தி இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார்.

3-வது செட்டின் துவக்கத்திலேயே கிளைஸ்டர்ஸ், லீ நா-வின் சர்வை முறியடித்தார். அதன் பிறகு லீ நா-விற்கு கிளைஸ்டர்ஸ் சர்வை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவரால் முடியவில்லை. காரணம் கிளைஸ்டர்ஸ் தனது சர்வ்களை துல்லியமாக வீசினார்.

இதனால் 3-வது செட்டில் லீ நா-வினால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. முதன் முறையாக் கிராண்ட்ஸ்லாம் தொடரில் சீன வீராங்கனை ஒருவர் ரன்னர் ஆகி சாதனை படைத்தார்.

இன்னும் சற்று நேரத்தில் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பூபதி-பயஸ் ஜோடி அமெரிக்காவின் பிரையன் சகோதரர்கள் ஜோடியை எதிகொள்கின்றனர்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts