கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார்.
கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி வந்தால் 100 நாட்களில் அயல்நாட்டு வங்கிகளில் உள்ள இந்திய கருப்பு பணம் மீட்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருந்தது. ஆனால் தற்போது கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு தாமதிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
கருப்பு பணத்தை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை மக்கள் முன் வெளியிட வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் சுமூகமாக நடைபெறவே தாங்கள் விரும்புவதாகவும், இருப்பினும் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தில் இருந்து பின்வாங்க முடியாது என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கம் போலவே சி.பி.ஐ அமைப்பு செயல்படுகிறது என்றும் வெங்கையா நாயுடு குற்றம்சாற்றினார்.

0 comments :
Post a Comment