background img

புதிய வரவு

சீன மீன் வதக்கல்

தேவையான பொருட்கள் :


மீன் - அரை கிலோ
பொடியாக நறுக்கிய பூண்டு - 4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
மைதா - 2 கைப்பிடி அளவு
சோளமாவு - 1 கைப்பிடி அளவு
சோயா சாஸ் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணை - தேவைக்கேற்ப


செய்முறை :


நறுக்கிய மீனை எலுமிச்சம் பழச்சாறு,உப்பு,மிளகுத்தூள் சேர்த்து ஊற வைக்கவும்.மாவைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணை ஊற்றி மீனை மாவில் தோய்த்து எடுத்து பொரிக்கவும்.வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,பூண்டு,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அஜினோமோட்டோ சர்க்கரை,உப்பு சேர்க்கவும். கலர் (கடைகளில் கிடைக்கும்)சேர்த்துக் கொள்ளவும்.கிரேவி பதத்தில் மசாலா கெட்டியாக வந்ததும் மீனைச் சேர்த்துப் போட்டுக்கிளறி இறக்கவும்.

0 comments :

Post a Comment

முக நூல்

Popular Posts