முதல்-அமைச்சர் கருணாநிதி நாளை டெல்லி செல்கிறார். டெல்லியில் வருகிற 31-ந்தேதி முதல்-மந்திரிகள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை பகல் 1.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் தங்கி இருக்கும்போது முதல்-அமைச்சர் கருணாநிதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசுகிறார்.
அப்போது தமிழக சட்டசபை தேர்தல் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அவர்கள் பேசுகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கையும் முதல்-அமைச்சர் கருணாநிதி சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு கருணாநிதி, 1-ந்தேதி மதியம் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மாலை சென்னை திரும்புகிறார்.

0 comments :
Post a Comment