லால் சவுக்கில் கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்த பா.ஜனதா மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து ஆலோசித்து வருவதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர், தங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் சட்டவிரோதமாக ஜம்மு விமான நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் பலவந்தமாக ஜம்மு காஷ்மீருக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் குற்றம்சாற்றினார்.
இதன் காரணமாக அம்மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடருவது குறித்து ஆலோசித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
குடியரசு தினத்தன்று காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் லால் சவுக்கில் தேசியக் கொடியேற்றுவதற்காக புறப்பட்ட பா.ஜனதா கட்சியின் இளைஞரணி (ஏக்தா) யாத்திரை, மாநில எல்லையில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது.
கட்சித் தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ்,அருண் ஜெட்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, ஹால்மார்க் ஹோட்டலில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment