புதுடில்லி:மகாத்மா காந்தியின் நினைவுதினம்நேற்று நாடு முழுவதும் கடைபிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்,பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர், அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தேசத் தந்தை மகாத்மா காந்தியின்63வது நினைவு தினம் நேற்று நாடுமுழுவதும் கடைபிடிக்கப்பட்டது.ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர்சோனியா உள்ளிட்ட தலைவர்களும், அமைச்சர் களும் ராஜ்காட்டில் உள்ளகாந்திஜியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்,அங்கு சர்வ மத பிரார்த் த னைகள் நடந்தன. காந்திஜியின் நினைவு நாள் நாடுமுழுவதும் நேற்று மத நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டது.இதையொட்டி, ராம்லீலா மைதானில்இருந்து ஜந்தர் மந்திர் வரை ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில்,கிரண்பேடி ஐ.பி.எஸ்., தகவல் அறியும்உரிமை சட்ட போராளி அரவிந்த் கேஜ்ரிவால், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சுவாமி அக்னிவேஷ், மவுலானா முகமது மதானி,டில்லி பேராயர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த பேரணியில், ஊழலுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன்,ஊழலை தடுக்க உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.தலைநகர் டில்லியில் மட்டுமல்லாமல், மும்பை, கோல்கட்டா,சென்னை, ஐதராபாத், பெங்களூரு, ஆமதாபாத், ஆக்ரா, ஜெய்ப்பூர், அவுரங் காபாத், ஜான்சி, பாகல்பூர்,லக்னோ, சண்டிகார், கான்பூர், குவாலியர், கோராக்பூர், கோவை, சூரத், வாரணாசி, அலிகார், பாட்னா,பனாஜி, புனே, கவுகாத்தி, புதுச்சேரி,திருச்சி, ஜம்மு ஆகிய நகரங்களிலும் ஊழலை எதிர்த்த நாளாக அனுசரித்தனர். அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்ட னிலும் நடந்தது.
0 comments :
Post a Comment